நீலகிரி மாவட்டம், குன்னூரில் "கிளீன் குன்னூர்" என்னும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவ்வமைப்பின் சார்பில் குன்னூர் ரேலியா அணை சுற்றியுள்ள பத்துமை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து, தற்போது இந்த அமைப்பினர் சார்பில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க் முதலான சுற்றுலா பகுதிகளில் "நமது குன்னூர் என்போம், குப்பை இல்லா சோலை காண்போம்" என்ற வாசகங்கள் எழுதிய குப்பைகள் போடும் பைகள் இன்று நிறுவப்பட்டன.

இந்நிகழ்வின் போது, கிளீன் குன்னூர் அமைப்பின் நிறுவனர் சமந்தா, வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பினர் பலர் கலந்துக் கொண்டனர்.